குஜராத் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை மத அடிப்படையில் பிரிப்பதாக பொய் செய்தி : 3 வது முறையாக தலை குனிந்து நிற்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.!

குஜராத் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை மத அடிப்படையில் பிரிப்பதாக பொய் செய்தி : 3 வது முறையாக தலை குனிந்து நிற்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.!

Update: 2020-04-16 06:33 GMT

சென்ற புதன்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது பத்திரிகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அஹமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக இந்து நோயாளிகளுக்கும், முஸ்லிம் நோயாளிகளுக்கும் தனித்தனி வார்டுகள் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அந்த மருத்துவமனையில் கண்காணிப்பளராக இருக்கும் டாக்டர் குன்வந்த் எச் ரத்தோட் இதை ஒப்புக் கொண்டதாகவும், இது அரசாங்கத்தின் முடிவு என்றும் நீங்கள் இது தொடர்பாக அரசிடமே கேட்கலாம் என்றும் அவர் கூறியதாக அறிக்கை கூறியுள்ளது.

ஆனால் இது குறித்து குஜராத் சுகாதாரத்துறை கூறுகையில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மதத்தின் அடிப்படையில் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் பிரித்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றும் இது இந்தியன் எக்பிரஸ் பத்திரிக்கையின் திட்டமிட்ட பொய் அவதூறு பிரச்சாரம் எனவும் சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியிருந்தது.

மேலும் "கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள், தீவிரம் போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது, மேலும் மருத்துவர்களின் பரிந்துரைகள்படி மட்டுமே நோயாளிகள் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் இந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையால் ஜோடிக்கப்பட்ட செய்தி என்றும் குஜராத் மாநில சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள் மற்றும் அவதூறுகளை பரப்புவதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே பலமுறை இது போல செய்ததுண்டு. ஒரு மத சாயத்தை பூசிக் கொண்டு இந்த பத்திரிக்கை ஏற்கனவே கூட குஜராத்தை ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் இனக்கலவரத்தை மூட்டுவதற்காக சென்ற 2019 ஆம் ஆண்டில் ஒரு பொய் செய்தி வெளியிட்டது. அதில் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபரை ஒரு 5 பேர் கொண்ட கும்பல் மடக்கியதாகவும், உன் பெயர் என்ன என கேட்டதாகவும் அதற்கு அந்த வாலிபர் தனது முஸ்லிம் பெயரை கூறியதும் அந்த கும்பல் வாலிபரை சரமாரியாக தாக்கியதாகவும் செய்தி வெளியிட்டு ஒரு வகுப்பு வாதத்தை கிளப்பியது. ஆனால் போலீசார் விசாரணையில் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும், அது ஒரு பழைய வீடியோ படம் தொடர்பானது என்பது தெரிய வரவே அந்த பத்திரிகை அப்போது தலை குனிந்து நின்றது.

அதேபோல், 2015 ஆம் ஆண்டில், அகமதாபாத் நகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு 'பச்சை நிற' சீருடையும், இந்து ஆதிக்கம் நிறைந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு குங்குமப்பூ வண்ணத்தில் சீருடை இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்செய்தி வெளியிட்டது. ஆனால் உண்மையில் இது அவர்களின் கற்பனையில் வரைந்த ஒரு உருவத்தைத் தவிர வேறில்லை. இது பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகக் குழுவின் முடிவு என்று பின்னர் அவர்களுக்கு தெரிய வந்ததும் அவமானம் அடைந்து தலை குனிந்து நின்றனர். இப்போது 3 வது முறையாக இவர்களின் சாயம் வெளுத்துப் போனது.  

Similar News