செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று வதந்தியை கிளப்பும் ஒன் இந்தியா! செய்திகளை திரித்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமா?

செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று வதந்தியை கிளப்பும் ஒன் இந்தியா! செய்திகளை திரித்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமா?

Update: 2019-06-02 14:09 GMT

செம்மொழியில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் ஜனாதிபதி விருதுகளை அரசு வழங்குவது வழக்கம். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. Presidential Awards of "Certificate of Honour" என்கிற விருதுக்கு விண்ணப்பிக்க கோருகிறது இந்த விளம்பரம்.

செம்மொழியில் சிறந்து விளங்கும் 60 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பரிசு தொகை ரூபாய் 5 லட்சம் என்று அந்த விளம்பரம் கூறுகிறது. அந்த விளம்பரத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லை என்றும். மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிக்கிறது என்றும் ஒன் இந்தியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.


உண்மை அறியாது செய்திகளை வெளியிடுவது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. 1953-ல் இந்த விருதுகளை மத்திய அரசு நிறுவியது. இதில் தமிழ் மொழிக்கு இடம் இல்லை என்பது முற்றிலுமாக தவறு.


தமிழ் மொழியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தனியாக இரண்டு ஜனாதிபதி விருதுகளை அரசு வழங்குகிறது. தொல்காப்பியர் விருது மற்றும் குறள் பீடம் விருது. அது மட்டுமில்லாமல், 5 இளம் தமிழ் அறிஞர்களுக்கு "Young Scholar Awards " ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது.

தமிழ் மொழிக்கு இடமேயில்லை என்று கூக்குரலிடுவது எதற்கு? மக்களிடம் விஷம தன்மைகொண்ட செய்திகளை கொண்டுசேர்ப்பது எதற்கு ? தொடர்ந்து இதுபோல நிகழ்வுகள் தொடர்வதால், காவல் துறை விசாரிப்பது நல்லது.

இந்த சர்ச்சையை ஏப்ரல் மாதமே தமிழக ஊடகங்கள் கிளப்பின. அப்போதே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீண்டும் இந்த போலி செய்தியை தற்போது கிளப்பியுள்ளது ஒன் இந்தியா. மத்திய அரசு விளக்கத்தை அப்போதே ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டது. அந்த செய்தியை இங்கே படிக்கலாம்.

தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை என்றும், தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, அது மட்டுமில்லாமல், 5 இளம் தமிழ் அறிஞர்களுக்கு "Young Scholar Awards" வழங்கப்பட்டது என்பதும் தான் உண்மை.

ஆனால், மேலே குடிப்பிட்டுள்ள விளம்பரத்தில் தமிழ் மொழி ஏன் குறிப்பிடபடவில்லை என்றால், "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்", தன்னிச்சையாக செயல்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் துணை வேந்தராக இருக்கிறார்.

தன்னிச்சையாக செயல்படாத மொழிகளுக்கு மட்டும் தற்போது விண்ணப்பம் பெற விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Similar News