திருப்பூர்: தாராபுரத்தில் இருந்து 1992-ஆம் ஆண்டு கரசேவைக்குச் சென்ற 29 பேர் கௌரவிப்பு! #ஜெய்ஶ்ரீராம்

திருப்பூர்: தாராபுரத்தில் இருந்து 1992-ஆம் ஆண்டு கரசேவைக்குச் சென்ற 29 பேர் கௌரவிப்பு! #ஜெய்ஶ்ரீராம்

Update: 2020-08-05 11:35 GMT

அயோத்தியில் ராம ஜன்ம பூமியில் குழந்தை ராமருக்கு கோவில் எழுப்பும் பணியின் முதல் படியாக பூமி பூஜை நிகழ்வு இன்று இனிதே நிறைவுற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக 1990களில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அழைப்பை ஏற்று ராம ஜன்ம பூமி இயக்கத்தில் இணைந்து கரசேவை ஆற்றிய பலரும் நினைவு கூறப்படுவதுடன் பூமி பூஜை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.


ஒரு பக்கம் ராமருக்கு கோவில் அமைவதை விரும்பாத தற்குறிகள் #LandOfRavan, ராமர் எங்கள் கடவுள் இல்லை, முஸ்லிம் படையெடுப்பாளர்கள் தமிழக கோவில்களை எதுவும் செய்யவில்லை என்று பித்துக்குளித் தனமாக உளறி வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கரசேவைக்கு பல தடைகளையும் தாண்டி அயோத்திக்கு சென்று பாபர் மசூதி இடிப்பில் பங்கெடுத்த பலரும் சிறப்பிககப்பட்டு வருகின்றனர்.


இந்த வரிசையில் 1992ம் ஆண்டு திருப்பூர் தாராபுரத்தில் இருந்து அயோத்திக்கு கரசேவை செய்யச் சென்ற 29 கரசேவகர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தென்தாரை திரு ரங்கநாதன் மணியக்காரர் அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அன்று உயிரைப் பணயம் வைத்து அயோத்தி சென்று கரசேவை செய்தவர்களின் முயற்சிக்கான பலன் இன்று கிட்டியுள்ளது. சற்றேறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பின் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்துள்ளது. எனவே ராமர் கோவிலுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் மறைந்த திரு.ரங்கநாதன் மணியக்காரரின் மகன்களான ராஜா மணியக்காரர், செந்தில் வாசன், ஸ்ரீகரன் ஆகியோரும் கணபதிபாளையம் ஜோதிடர் திரு.பட்டாளம் ராமசாமி அவர்களும் அன்று அயோத்தி சென்ற கரசேவகர்களை இன்று கௌரவித்து சிறப்பித்துள்ளனர்.

Similar News