தன் கை குழந்தையுடன் வேலைக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, அவருக்கு குவியும் பாராட்டுக்கள்.!

தன் கை குழந்தையுடன் வேலைக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, அவருக்கு குவியும் பாராட்டுக்கள்.!

Update: 2020-04-13 07:07 GMT

ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தன்னுடைய கைக்குழந்தையுடன் கொரோனா வைரஸ் தடுப்பு பணியை தொடங்கினர். இதற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஆந்திராவில் 350 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்நிலையில் விசாகப்பட்டினம் பெண் ஐஏஎஸ் அதிகாரி நேற்று தன்னுடைய கைக்குழந்தையுடன் அலுவலகத்திற்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணியை தொடங்கினர். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் பெருமளவில் பரவி வருகிறது.

இவருக்கு சென்ற மார்ச் மாதம் இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. இவருடைய கணவர் வழக்கறிஞராக வேலை பார்க்கிறார். மேலும் குழந்தை பிறந்த சமயத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பிரசவ விடுப்பை எடுக்காமல் 22 நாட்களில் இவரது கைக்குழந்தையுடன் நேற்று பணியை தொடங்கினர். இவருடைய இந்த கடமை உணர்ச்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2520369

Similar News