குடமுழுக்குக்கு தயாராகும் தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோயில்!

குடமுழுக்குக்கு தயாராகும் தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோயில்!

Update: 2018-10-27 17:18 GMT

கரூர் மாவட்டம் கருப்பத்தூர், ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, துவக்க விழா பூஜை நடந்து முடிந்துள்ளது.


கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூரில் காவிரி கரையோரம் ஸ்ரீலஸ்ரீ விமோசனாந்தா குருமகராஜின் முயற்சியால் 1965-இல் ஐயப்பன் கோயில் அமைக்கப்பட்டது.


இந்தக் கோயில் தான் தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் சிற்ப சாஸ்திர முறைப்படி ஐயப்பனுக்கு புதிதாக கருங்கல் கருவறையும், ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீமஞ்சமாதா ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று(அக்டோபர்  28) நடக்கிறது.


இது ஐயப்பன் சேவா சங்கம் டிரஸ்டி மற்றும் கிராம மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் திருக்கோயிலுக்கு கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பக்தர்கள் இருக்கிறார்கள். இங்கு சபரிமலையிலிருந்து அச்சு எடுத்து வந்து செய்யப்பட்ட ஐயப்பன் சிலை இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அங்கிருந்து மண் எடுத்து வந்து தான் இந்தக் கோயில் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Similar News