இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் - முக்கியத்துவம் என்ன?

இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் - முக்கியத்துவம் என்ன?

Update: 2020-07-29 12:41 GMT

இந்தியாவும் பிற உலக நாடுகளும் சீன கம்யூனிஸ்ட் அரசின் ஏகாதிபத்திய போக்கை எதிர்கொள்ளும் நிலையில் ‌பிரான்ஸில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. முதல் ஐந்து ரஃபேல் விமானங்கள் தற்போது வந்து சேர்ந்திருக்கும் நிலையில் ஒப்பந்தப்படி இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்ட எஞ்சிய விமானங்கள் விரைவில் இந்திய விமானப் படையில் இணையும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் சீன ராணுவத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள இந்திய ராணுவத்தில் ரஃபேல் போர் விமானங்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஐந்து முக்கியப் புள்ளிகளாகப் பார்ப்போம்.

  1. இந்திய விமானப் படையின் Mirage 2000 மற்றும் Su-30 MKI ரக போர் விமானங்கள் மூன்று மற்றும் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவை. ரேடாரில் இருந்து தப்பித்து மறைவாக செயல்படும் திறன் கொண்ட ரஃபேல் வகை போர் விமானங்கள் 4.5வது தலைமுறையைச் சேர்ந்தவை.
  2. சிலநாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இருந்து உயர் ரக AASM (Armement Air-Sol Modulaire) HAMMER (Highly Agile Modular Munition Extended Range) வானில் இருந்து நிலத்தில் ஏவும் ஏவுகணைகளை‌ அவசர காலத் தேவைக்காக வரவழைக்க ஆர்டர் கொடுத்த செய்தி ஊடகங்களில் வெளியானது. HAMMER ரக வானிலிருந்து நிலப்பகுதியை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணைகள் மலைப்பாங்கான கிழக்கு லடாக் பகுதி உட்பட அனைத்து விதமான நிலப்பகுதிகளிலும் பதுங்கு குழிகளையும் பிற நிரந்தர கட்டுமானங்களையும் அழிக்கும் வல்லமை படைத்தது.
  3. அமெரிக்கஆராய்ச்சி அமைப்பு ஒன்று வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் வான்வழி தாக்குதலில் சீனாவைவிட இந்தியாவுக்கே திறனும் அனுகூலமும் அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது. 'திபெத் மற்றும் ஜிங்ஜியாங் பகுதிகளில் தட்பவெப்பநிலை மற்றும் புவியியல் காரணிகள் காரணமாக கடல் மட்டத்திலிருந்து மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள சீன விமானப்படை தளங்களில் இருந்து போர் விமானங்களை இயக்குவது கடினம் என்பதால் அவற்றின் முழு திறனில் பாதியளவே பயன்படும். ஆனால் இந்திய தரப்பில் பயன்படுத்தப்படும் Mirage 2000 மற்றும் Su-30 வகை ஜெட்கள் அனைத்துக் கால நிலைகளிலும் பல்வேறு வகையான பணிகளுக்காகவும் பயன்படுத்தும் திறன் கொண்டவை. ஆனால் சீன தரப்பில் J-10 ரக போர் விமானங்களுக்கு மட்டுமே இந்த திறன் உள்ளது' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றோடு ரஃபேல் ரக விமானங்களும் சேர்ந்தால் இந்தியாவின் போர்த்திறன் இன்னும் வலுப்படும்.
  4. ஒருவேளைசீனாவுடன் போர் மூளும் சூழலில் அதைப் பயன்படுத்திக் கொண்டு மற்றொரு திசையில் இருந்து இந்தியாவை தாக்குவது பாகிஸ்தானின் கனவு என்று கூறலாம். ஆனால் அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டிருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானியர்களின் கனவை இன்னும் கடினமாக்கும். "ரஃபேல் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்ட பிறகு எல்லைக் கோட்டுப் பக்கம்கூட பாகிஸ்தான் எட்டிப்பார்க்காது" என்று அப்போதைய விமானப்படை தலைமை தளபதி தனோவா கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.
  5. காங்கிரஸ்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பல எதிர்க்கட்சி தலைவர்களும் இன்னும் பலரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரபேல் போர் விமானங்கள் வாங்க செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றது நினைவுகூரத்தக்கது. ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்கள் மட்டுமல்ல நாட்டிலேயே உயர்ந்த நீதி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உச்சநீதிமன்றமே ஊடகங்களும் அரசியல் சக்திகளும் இணைந்து இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் நடத்திய நாடகத்தை தவிடுபொடியாக்கி ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுவதற்கு வழிவகை செய்தது. எனவே இந்த நிகழ்வு தேசத்தின் அரசியல் மற்றும் ராணுவத்தின் மனஉறுதியை மேம்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

Source: https://www.thetruepicture.org/china-aggression-pakistan-importance-of-rafale-for-india/

Similar News