இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்வீரர் பா.ஜ.க விளையாட்டுப் பிரிவு துணைத் தலைவராக நியமனம்
பா.ஜ.க விளையாட்டு பிரிவு துணைத் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் கடந்த 2020 ஆம்- ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். தற்போது அவர் தமிழ்நாடு பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .
இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில்,' ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணனின் அனுபவம் தமிழ்நாடு பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் மேம்படுத்தும் என உறுதியாக நம்புகிறோம்' என தெரிவித்தார்.