அயோத்தி வரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு.!

அயோத்தி வரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு.!

Update: 2019-11-13 10:12 GMT

பல தசம ஆண்டுகளாக ராமஜென்ம பூமி யாருக்கு என்பது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. மொகலாயர்கள் ஆட்சி காலத்திலும், அதற்கு பின் வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும், அதற்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மத சார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ் அரசும் இந்துக்களுக்கு எதிரான போக்கையே இந்த வழக்கில் கையாண்டன. இதனால் இந்து கோவிலை இடித்து அங்கு கட்டப்பட்ட மசூதி ராமபக்தர்களால் இடிக்கும் நிலை உருவானது.


இதற்கு காரணம் இந்துக்களின் நியாயமான உணர்வை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாமல் அரசியல் சுயநலத்துக்கு உட்பட்டதே காரணமாகும். இந்த நிலையில் தற்போது கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசை ஆண்டு வரும்  பாஜக வினர் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு அதே சமயம் தொல்லியல் துறை சான்றுகளுக்கு ஏற்ப இந்த பிரச்சினைக்கு தீர் வு காண முயற்சி எடுத்து நீதிமன்றம் வாயிலாக நியாயமான தீர்ப்புக்கு வழி கோலியுள்ளது.


இந்த நிலையில் நாடெங்கும் உள்ள இலட்சக்கணக்கான ராம பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து அயோத்திக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இலவசமாக உணவளிக்க பிரம்மாண்ட சமையல்கூடம் அமைப்பதற்கு பாட்னாவைச் சேர்ந்த அனுமன் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


பிஹார் மாநிலம் பாட்னாவில் மகாவீர் மந்திர் அறக்கட்டளை உள்ளது. இதன் சார்பில் புகழ்பெற்ற அனுமன் கோயில் உள்ளது. தற்போது அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


இதுகுறித்து மகாவீர் அறக்கட்டளையின் செயலர் கிஷோர் குணால் கூறும்போது, “ராமர் கோயில் அமைக்க ரூ.10 கோடியை எங்களது அறக்கட்டளை வழங்கவுள்ளது. கோயில் கட்ட 5 ஆண்டுகளாகும் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2 கோடியை தவணை முறையில் வழங்குவோம்.


மேலும் கோயிலுக்கு பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு உணவளிக்க வசதியாக மிகப்பெரிய சமையல் கூடம் அயோத்தியில் அமைக்கப்படும். பாட்னாவின் மிகவும் பிரபலமான இனிப்புவகையான நைவேத்தியம் லட்டு பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த லட்டு வகைகள் ரகுபதி லட்டுகள் என அழைக்கப்படும்” என்றார்.


கிஷோர் குணால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 1990-களில் அயோத்தி பகுதியில் சிறப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் அயோத்தி குறித்து 2 நூல்களையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News