அடுத்த 100 நாட்களில் மேலும் 8 கோடி ஏழைப்பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு !

அடுத்த 100 நாட்களில் மேலும் 8 கோடி ஏழைப்பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு !

Update: 2019-06-16 08:52 GMT


இந்தியா முழுவதும் அனைவருக்கும் இயற்கை எரிவாயு திட்டம் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட மத்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது வரை திட்டமிட்ட இலக்கை முடித்துவிட்டனர். அடுத்த 100 நாட்களுக்குள் திட்டமிட்டவாறு 8 கோடி ஏழைப்பெண்களுக்கு இலவச எரிவாயு திட்டம் நிறைவேற்றப்படும் என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தல், பெட்ரோலிய உற்பத்தி ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகிய திட்டங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகளின் ஐந்து வருட செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிபொருளை வழங்கும் இலக்கை அடைவதற்கும், அடுத்த 100 நாட்களில் 8 கோடி பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளின் பணிகளை நிறைவு செய்வதற்கும் அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள் என்று பிரதான் கூறியுள்ளார்.


மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும், பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் பணியாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.


Similar News