கைப்பட வாசிக்கப்படும் ஆளுமைமிக்க கருவி கிட்டார் - கிட்டாரோட வரலாறு தெரியுமா..?

கைப்பட வாசிக்கப்படும் ஆளுமைமிக்க கருவி கிட்டார் - கிட்டாரோட வரலாறு தெரியுமா..?

Update: 2020-01-17 03:15 GMT


மன அழுத்தம், உளைச்சல் என மனரீதியாக எழும் பிரச்சனைகள் ஏராளம். இதற்கு
தீர்வு செல்லும் நிபுணர்கள் பலரும் பெரும்பாலும் பரிந்துரைப்பது நல்ல
இசையை.    பல சாதனையாளர்கள் தங்கள் வெற்றிகளை பதிவு செய்யும்
நேர்காணலகளில், சுயசரிதைகளில் தங்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் ஊட்டுவது இசை
என சொல்வதும் உண்டு.


அளப்பறியாத மதிப்பு வாய்ந்த இசைக்கு மேலும்
மகுடம் சேர்ப்பது இசை கருவிகள். இசை கருவிகளை மனிதர்கள் இயக்கி வந்த காலம்
மாறி இன்று இசைக்கருவிகளையும் இயக்குகின்றன கணிணிகள். ஆனாலும்
விதிவிலக்காய் தன்னுடைய தனித்துவத்தை விட்டுகொடுக்காமல் இன்றும் திறம்மிக்க
கலைஞர்களின் கைப்பட வாசிப்படும் பல கருவிகளில் ஆளுமைமிக்க கருவி கிட்டார்.


 தன்னுடைய எழிலான உருவத்தாலும், உள்ளத்தை வருடம் ஒலியாலும்
தனித்துவிளங்கும் கிட்டார் ஒவ்வொறு மனிதருக்கும் இசையை மட்டுமல்லாமல் பலத்த
போட்டிகளுக்கு இடையே நம் தரத்தையும், சுயத்தையும் விட்டுக்கொடுக்காமல்
வளரும் பண்பையும் சேர்த்தே விதைக்கிறது.


கிட்டார் பற்றிய சுவரஸ்யமான படங்களும் சில தகவல்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


1. கி.மு இரண்டாம் மில்லினியத்திலேயே கிட்டாரின் முன்மாதிரி ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.





2. முதல் எலக்ட்ரிக் கிட்டார் "ஜார்ஜ் பியுசாம்ப்" மற்றும் "அடால்ப் ரிக்கென்பெக்ராம்" என்பவரால் 1931 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இதனுடைய பாகங்கள் உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது இதன் தனிசிறப்பு.





3. இசை உலகின் முன்னனி பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில், 20 ஆம் நூற்றாண்டில் உலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கிட்டாரிஸ்ட் என்று அறிவிக்கப்பட்டவர் "ஜிமி ஹென்ரிக்ஸ்"





4. உலகின் அதிக விலை உயர்ந்த கிட்டார் இது. 19 பிரபலமான கிட்டார் ஜாம்பவன்கள் இதில் கையொப்பம் இட்டுள்ளனர். ஓர் தொண்டு நிறுவனத்திற்க்காக ஏலத்தில் விடப்பட்ட இந்த கிட்டாரின் விலை $2.8 மில்லியன்.





5. இன்றைய தேதியில் அதிக விலைமதிப்பில் சந்தையில் கிடைக்கும் கிட்டார் "பெண்டர் மிட்நைட் ஓப்யுலன்ஸ்"(Fender Midnight Opulence) இதன் விலை $90.000.





6. இந்த ஒல்லியான கிட்டார் கருவி கார்னல் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்டது. இதன் அளவு வெறும் 10 மைக்ரான் தானாம்.





7. மிகவும் குட்டியான செல்ல கிட்டார் இது இதன் பெயர் பெர்சிஷன். இதனுடைய உயரம் 67.5 செ.மீ மட்டும் தான்.





8. உலகின் மிகப்பெரிய கிட்டார் இது. இதனுடைய நீளம் 13 மீட்டர் 23 செ.மீ. இது ஹாஸ்டனில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமியால் 2001 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இதன் எடை 1023கிலோ




Similar News