பயந்து பதுங்கிய ஸ்டாலின் ! போராட்டம் வாபஸ் ! கவர்னரிடம் சென்று நேரில் விளக்கம்.

பயந்து பதுங்கிய ஸ்டாலின் ! போராட்டம் வாபஸ் ! கவர்னரிடம் சென்று நேரில் விளக்கம்.

Update: 2019-09-19 03:29 GMT

சில தினங்களுக்கு முன்பாக மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில் "தேசத்தை ஒரேமாதிரியாக அடையாளப்படுத்திக் கொள்ள ஹிந்தி மொழி கற்றுக் கொள்வது அவசியம் என்றும், இரண்டாம் மொழியாக, மொழி ஒன்றை பயில விரும்பினால் இந்தியை மக்கள் கற்கலாம்" என்றும் கூறியிருந்தார்.


ஆனால் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட சில எதிர் கட்சிகள் மற்றும் இடது சாரிகள் இதை தவறாக புரிந்து கொண்டு அமித்ஷா இந்தியை திணிக்க விரும்புவதாக கூறி நாளை வெள்ளிக்கிழமை திமுக தலைமையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.


இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பேசுகையில் " ஹிந்தியை திணிக்க வேண்டும் என நான் பேசவில்லை. ஆனால் நான் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். 2- வது மொழியாக ஹிந்தியை படித்தால் நல்லது என்றும் இதன் மூலம் இந்தியாவை ஒரேமாதிரியாக அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றுதான் கூறினேன் என்றார்.


இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தி.மு.க மூத்த தலைவர்கள் நேற்று மாலை கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகிதத்தை சந்தித்து பேசுகையில் "


உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தங்களுக்கு திருப்தி அளித்ததாகவும், அப்போது, ஹிந்தி திணிப்பு இல்லை என்றும் தன்னுடைய பேச்சை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள் என்கிற அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்று தாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் கூறிவிட்டு வந்துள்ளனர்.


ஸ்டாலின் ஏன் பின் வாங்கினார் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது.


ஹிந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினால் தி.மு.க விற்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்காது என உளவு துறை ரிப்போர்ட் அளித்துள்ளது.அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் அவர்கள் நடத்தும் பள்ளிகள் பற்றியும் தயாநிதிக்கு ஹிந்தி தெரியும் அதனால் அமைச்சர் பதவி கேட்டது ஆகியவற்றை கிளப்பவும் எதிர் தரப்பினர் தயாராக இருந்தது, தெரியவந்துள்ளது.


அதுபோல் உணச்சிகரமாக இந்தியாவை பற்றி பேசிவிட்டால் உபா சட்டம் பாயும்,என்ற பயத்தினாலும் போராட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


2ஜி வழக்கை நீதிபதி அஜய்குமாருக்கு அமர்வுக்கு மாற்றியது இதனால் கனிமொழி போராட்டம் வேண்டாம் என ஸ்டாலினிடம் அழுத்தம் கொடுத்தாக தெரிகின்றது


Similar News