கோவையில் ஜி 20 தொழில்நுட்ப அமைச்சர்களின் மாநாடு - அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தப்போகும் மத்திய அரசு

'ஜி-20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மாநாடு கோவையில் நடத்தப்படும்' என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-23 02:25 GMT

'ஜி-20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மாநாடு கோவையில் நடத்தப்படும்' என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி 20 உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த 15ம் தேதி இந்தோனேசியாவின் பாலித்தீவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பு இந்தியாவின் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலக வணிகத்தின் 80 சதவீதம் ஜி 20 நாடுகளில் தான் நடக்கின்றன, உலக மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு இந்த ஜீ2 நாடுகளில் தான் உள்ளது. இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் மாநாடு தமிழகத்தின் வணிக நகரான கோவையில் நடத்தப்படும் எனும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 அக்டோபரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி நடத்தினார். அதனை தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் போட்டியான ஒலிம்பியாட் இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்தது. தற்பொழுது சர்வதேச முக்கியத்துவம் வந்து ஜி 20 அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாடு கோவையில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Source - Dinamalar 

Similar News