500 சதவிகிதம் மாசு குறைந்த கங்கை நதிநீர் - குடிக்கும் அளவுக்கு தரம் உயர்ந்த ஹரித்வார், ரிஷிகேஷ் நீர்நிலை!

500 சதவிகிதம் மாசு குறைந்த கங்கை நதிநீர் - குடிக்கும் அளவுக்கு தரம் உயர்ந்த ஹரித்வார், ரிஷிகேஷ் நீர்நிலை!

Update: 2020-04-16 03:32 GMT

ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர்(டி.டி.எஸ்), தொழில்துறை கழிவு ஆகியவை வெளியேறுவது குறைந்துள்ளதால்,  கங்கை நதி நீரின் மாசு 500 சதவீதம் குறைந்துள்ளது. இந்த சுத்தமான நீர் இப்போது பூஜையின் போது அச்சமனுக்கும் பொருந்தும் என்று டைம்ஸ் டிராவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கங்கை நதியில், மாசு முற்றிலும் குறைந்துள்ளது. எந்த கழிவுகளும் நதியில் கலப்பது இல்லை. இதனால், நதி நீரின் தரம் அதிகரித்துள்ளது. இப்போது மக்கள் குடிப்பதற்கு ஏற்ற வகையில் நீரின் தரம் உள்ளது.

கடந்த சில நாட்களாக, உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், கங்கையில் நீரோட்டமும் அதிகரித்து உள்ளது. இதே நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் அல்லது தொழிற்சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தால், கங்கை நதி நீரின் தரம் மேலும் அதிகரிக்கும். 

சுற்றுச்சூழல் விஞ்ஞானி பி டி ஜோஷி கருத்துப்படி, தண்ணீர் மிகவும் சுத்தமாக இருந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது நாடு தழுவிய ஊரடங்கால் தொழில்துறை மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளில் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதனால் ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பேசுகையில், ஹரித்வாரின் நீரை சுத்தம் செய்த பின்னர் குடிக்க பயன்படுத்தலாம் என்றும் ரிஷிகேஷில் உள்ள நீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Similar News