ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு இலவசம்! நகர்ப்புற மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு இலவசம்! நகர்ப்புற மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

Update: 2019-10-30 06:30 GMT

ஒரிசா மாநிலத்தில் உள்ள நகரங்களில் நகர்ப்புற ஏழை மக்களுக்காக ‘ஆஹார்’ என்ற திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. இதன்படி ஏழை மக்களுக்கு ரூ. 5 கட்டணத்தில் சாம்பார் சாதம் பருப்பு சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பும் உள்ளது.


இந்த நிலையில், இந்த திட்டத்துடன் இணைந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆங்காங்கு கால்வாய்களிலும், நீர்நிலைகளிலும் அடைத்துக் கொண்டிருக்கிற பிளாஸ்டிக் குப்பைகளை வெளியேற்றவும் â€˜à®•à¯‹à®Ÿà¯à®ªà¯‡à®Ÿà¯ கவுன்சில்’ என்ற அரசு சார்ந்த தொண்டு நிருவனம் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் மக்களுக்கு, à®’ருவேளை உணவை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இத்திட்டத்தின் படி ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருபவர்களுக்கு இலவச முழு சாப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


இது தொடர்பாக அந்த அமைப்பின் முதன்மை அதிகாரி அலோக் சமன்தராய் கூறியதாவது:
இந்த திட்டம் இந்த நகரம் பாலிதின் கழிவுகள் இல்லாத நகரமாக அடுத்த சில வாரங்களில் மாற்றப்பட்டு விடும். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள், à®µà®¿à®³à®®à¯à®ªà®° பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. நல்ல வரவேற்புள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


இந்த திட்டத்தால் ஏழை நகர்புரமக்கள் வயிறார சாப்பிட வழி ஏற்பட்டுள்ளதாகவும், அக்குடும்ப பெண்களுக்கு சமையல் செய்யும் பணிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது. 




https://odishasuntimes.com/get-free-food-in-exchange-for-plastic-waste-in-odishas-kotpad/

Similar News