கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை தவிர்க்க ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் : மத்திய வர்த்தக துறை அறிவிப்பு

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை தவிர்க்க ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் : மத்திய வர்த்தக துறை அறிவிப்பு

Update: 2020-04-12 09:47 GMT

கொரோனா தொற்று பரவலால் உலக அளவில் ஏற்றுமதி தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. இந்த நிலையில், உடனடியாக ஊக்க சலுகைகள் அளிக்கப்படாவிட்டால் இந்த தொழில்களை நம்பியுள்ள 15 இலட்சம் பேர் வேலை இழந்துவிடுவர் என இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பு அரசிடம் கவலை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பலவேறு விஷயங்களை தளர்த்தியதுடன், கால நீட்டிப்பும் வழங்கியுள்ளதாக மத்திய வர்த்தக துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை ஓராண்டுக்கு நீட்டித்தல், ஏற்றுமதியை ஊக்குவிக்க முன் கூட்டியே அங்கீகாரம் வழங்குதல், உறுப்பினர் சான்றிதழ்களுக்கு பதிவு செய்வதை நீட்டித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.  

Similar News