இப்படி நம்ப வச்சு கழுத்தறுக்கலாமா - வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய தி.மு.க மீது கொதிக்கும் அரசு ஆசிரியர்கள்

அரசு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தி.மு.க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தி.மு.க அரசின் மேல் கடும் கோபத்தில் அரசு ஆசிரியர்கள் உள்ளனர்.

Update: 2022-11-14 02:39 GMT

அரசு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தி.மு.க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தி.மு.க அரசின் மேல் கடும் கோபத்தில் அரசு ஆசிரியர்கள் உள்ளனர்.

காளையார் கோவிலில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி வாக்குறுதி நிறைவேற்றாத தி.மு.க அரசு மற்றும் மீது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அவர் கூறியதாவது, 'தி.மு.க தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன், திட்டமிட்டு இடைநிலை ஆசிரியர் சம்பளம் முரண்பாடுகளை கலைவோம், உயர்கல்வி ஊக்க ஊதியம் நிறுத்திவைப்பு, இயற்றிய விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்குவோம் என உறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த ஒன்னரை ஆண்டாக என் வாக்குறுதி நிறைவேற்ற வில்லை என்ற அதிர்ச்சி அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 சென்னையில் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கோரிக்கை வாழ்வாதார மாநாட்டில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம். நவம்பர் 3 தர்ணா போராட்டம் நடத்தினோம், இந்த போராட்டம் தொடரும். 30 அம்ச கோரிக்கையை வைத்து சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என்றார் உடன் மாவட்ட செயலாளர்கள் முத்துப்பாண்டியன் உள்ளே இருந்தார்.



Source - Dinamalar

Similar News