கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு முதல் கட்டம், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 2- ம் கட்டமாக தேர்தல்! தேர்தல் தேதி குறித்தும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு!

கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு முதல் கட்டம், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 2- ம் கட்டமாக தேர்தல்! தேர்தல் தேதி குறித்தும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு!

Update: 2019-11-30 10:10 GMT

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேத்தல் நடைபெறாமல் உள்ளது. சென்ற 2016-ம் ஆண்டு இந்த தேர்தலை நடத்த அதிமுக அரசு முற்பட்டபோது இட ஒதுக்கீடு சரிவர கொண்டு வரப்படவில்லை என்று காரணம் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டு இது வரை நடத்தப்படாமல் உள்ளது.


இந் நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் கூட்டத்தை கூட்டி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கருத்துக்கள் கேட்டார். அப்போது உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள். ஓட்டுச் சீட்டுக்கு பதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையே பயன்படுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.



இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதியை வருகிற திங்கட்கிழமை (டிசம்பர் 2-ந்தேதி) மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.



பஞ்சாயத்து, ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 31-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என்றும்,
இதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பும் வருகிற திங்கட்கிழமை வெளியிடப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


Similar News