தெய்வீக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது பெரும் பாக்கியம்- பிரதமர் மோடி!

தெய்வீக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது வாழ்நாளில் மிகச்சிறந்த தருணம் எனவும் பாக்கியம் எனவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-01-23 08:30 GMT

அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை பூஜைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றுச் செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்திருந்தார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.  


அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை வெகு விமரிசையாக திறக்கப்பட்ட நிலையில், என் வாழ்நாளில் மிகச் சிறந்த தருணம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை நேற்று 12.30-க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டபோது ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்த நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலும், நாடு முழுவதும் உள்ள கோயில்களிலும் தொலைக்காட்சியிலும் சிறப்பு நேரலை ஒளிபரப்பப்பட்டது. 


சிலை திறப்புக்குப் பின்னர் பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில், அயோத்தியில் ஸ்ரீ ராமரின் சிலை திறக்கப்பட்டது அனைவரையும் உணர்ச்சிக்குள்ளாகியுள்ளது. எனது வாழ்நாளில் சிறப்பான தருணம் என்று நினைக்கிறேன். இந்த தெய்வீக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜெய் ஸ்ரீ ராம்..! எனப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விழா நிறைவடைந்ததும் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் குபேர் திலாவுக்குச் செல்லவும், கோயில் கட்டுமானத்துடன் தொடர்புடைய தொழிலாளர்களுடன் உரையாடவும் திட்டமிடப்பட்டது.


SOURCE :NEWS

Similar News