குரூப்- 1 தேர்வு நடைபெறும் நாளில் கல்லூரி முதுகலை பாட தேர்வு - தேர்வர்கள் கவலை

குரூப்-1 தேர்வு நடைபெற இருக்கும் நாளில் கல்லூரி முதுகலை பாடத் தேர்வு வருவதால் தேவர்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

Update: 2022-11-16 05:00 GMT

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு,கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உட்பட குரூப்-1பதவிகளில் வரும் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த தேர்வை தமிழக முழுவதும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் எழுத இருக்கின்றனர். இந்த நிலையில் குரூப்-1 முதல் நிலை தேர்வு நடைபெறும் அதே நாளில் கல்லூரி முதுகலை மாணவ மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டவணைப்படி முதுகலை பாடங்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுதுவதா? எதிர்கால உயர்வுக்காக விண்ணப்பித்த குரூப்-1 தேர்வு எழுதுவதா என்ற கவலையில் தேவர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்கள் கூறுகையில் இந்த குரூப்-1 தேர்வுக்காக மிகவும் கஷ்டப்பட்டு படித்திருக்கிறேன். இப்படி இருக்கும் சூழ்நிலையில் கல்லூரியிலும் அதே நாளில் தேர்வு அறிவித்திருக்கிறார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். கல்லூரியில் அந்த நாளில் நடைபெறும் தேர்வை மட்டும் மாற்றி அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.





 




Similar News