எலக்ட்ரிக் கார்களுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு! 12% இருந்து 5% ஆக அதிரடி குறைப்பு!!

எலக்ட்ரிக் கார்களுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு! 12% இருந்து 5% ஆக அதிரடி குறைப்பு!!

Update: 2019-07-27 14:30 GMT

எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக எலக்ட்ரானிக் வாகனங்கள் மீதான வரி குறைக்க டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், எலக்ட்ரிக் வாகன சார்ஜர்களுக்கான ஜி.எஸ்.டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 


இது தவிர எலக்ட்ரிக் பஸ்களை வாடகைக்கு விடுவோருக்கு வரி விலக்கு அளிக்கவும் ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 


இந்த புதிய வரி குறைப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar News