ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமன் தலம்

சீதையைக் கடத்திச் சென்று சிறைவைத்த ராமனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட அனைவருக்கும் ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலைப் பற்றி காண்போம்.

Update: 2023-02-12 17:45 GMT

சீதையை மீட்கும் பணியில் ராமருக்கு உதவி புரிய அனுமன் தலைமையிலான வானரப் படைகள் இலங்கை நோக்கி தொடர்ந்து பயணித்ததால் அவர்களுக்கு கலைப்பும் தாகமும் ஏற்பட்டது.தாகத்தை தணித்துக் கொள்ள இடம் தேடிய பொழுது ஓர் இடத்தில் குகையின் உள்ளே இருந்து ஈரமான இறக்கைகளுடன் பறவைகள் வெளியே வந்து கொண்டிருந்ததை வானரப் படைகள் கவனித்தன. அந்த குகையின் அருகே சென்று பார்த்தபொழுது அரண்மனை போன்ற அழகான கலைநயமிக்க கட்டிடங்கள் இருந்ததையும் அங்கே காவிரி பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருந்ததையும் அதன் கரையில் பெண்ணொருத்தி தவத்தில் ஆழ்ந்திருந்ததையும் கண்டு அனுமானும் வானர படையினரும் வியப்பில் ஆழ்ந்தனர்.


தவப் பெண்ணின் காதில் விழும்படியாக சற்று தொலைவில் நின்று கொண்டு ஆஞ்சநேயர் ராம மந்திரத்தை உச்சரிக்க தொடங்கினார் . ராம நாமம் காதுகளில் ரீங்காரமிட்டதால் தவத்திலிருந்து விடுபட்ட அந்தப் பெண் ஆஞ்சநேயரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டாள். அவள் அனுமனுக்கும் வானர படையினருக்கும் தண்ணீர் வழங்கி தாகம் தீர்த்தாள். பின்னர் அந்த பெண்ணின் தவம் பற்றி அனுமன் கேட்டறிந்தார். அதற்கு அந்த பெண் என் பெயர் சுயம்பிரபை நான் ஒரு தேவலோகப் பெண். மயன் என்ற கலைஞன் பிரம்மதேவனிடம் பெற்றிருந்த வரத்தின் ஆற்றால் இந்த பொன் மாளிகையை உருவாக்கினான். அதன் பிறகு ஹேமை என்ற தேவலகப்பின் மீது மோகம் கொண்ட அவளோடு இங்கே வசித்து வந்தான். இந்த பாவத்தை பற்றி நாரதர் இந்திரனிடம் கூறினார். கோபம் கண்டேந்திர நம்பு எய்தியும் அயனை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. இந்திரன் தன்னுடைய தோஷத்தை போக்கும்படி ஈசனிடம் முறையிட்டான். இதனால் மனமிறங்கிய சிவபெருமான் அகத்தியரை கண்கொண்டு நோக்கினார் . அந்த பார்வையின் பொருள் உணர்ந்து கொண்ட அகத்தியர் இந்த குகைக்குள் காவிரியை வரவழைத்துவிட்டார் .அந்த நதியில் நீராடியதும் இந்திரனின் தோஷம் நீங்கியது .அப்போது முதல் இந்திரதேசத்தை காத்து வரும் படி பிரம்மதேவன் எனக்கு உத்தரவிட்டிருந்தார்.


மேலும் "இந்திர தீர்த்தத்திற்கு அனுமன் வரும் வேளையில் அவரிடம் இதனை காக்கும் பொறுப்பை அளித்துவிட்டு நீ தேவலோகம் வந்துவிடு" என்று பிரம்மன் கூறியிருந்தார். தற்போது நீங்கள் வந்து விட்டீர்கள் இந்த தீர்த்தத்தை காக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு நான் தேவலோகம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினாள்.உடனே அனுமன் "தாயே ராமபிரானுடன் சீதாப்பிராட்டியை சேர்க்கும் வரை எங்களுக்கு ஓய்வு இல்லை . அதுவரை எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும். நான் எடுத்த வேலை முடிந்ததும் நானே வந்து பொறுப்பை ஏற்று உங்களை பணியில் இருந்து விடுவிக்கிறேன்" என்றார் . அதன்படியே இராவண யுத்தம் முடிந்து அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் நிறைவடைந்ததும் இந்த இடத்திற்கு வந்த தீர்த்தத்தை காக்கும் பொறுப்பை ஏற்க அனுமன் சித்தமானார்.


இது பற்றி அறிந்த ராமபிரான் தானும் உடன் வந்து அனுமனை அங்கே அமர்த்தி ஆட்சி புரியும்படி அங்கு வரும் பக்தர்களுக்கு அளவில்லாத வரங்களை அருளும்படியும் ஆசி கூறிவிட்டு அயோத்தி சென்றார். மேலும் இத்தலத்துக்கு 'கிஷ்கிந்தாபுரம்' என்றும் ராமபிரான் பெயர் சூட்டினார். அதுவே மருவி தற்போது 'கிருஷ்ணாபுரம்' என்று அழைக்கப்படுகிறது. ராமபிரானே யாகம் வளர்த்து அனுமனை பிரதிஷ்டை செய்த தலம் என்பதால் இந்த ஆலயத்தில் வெண் சாம்பல் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதோடு தித்திப்பான தீர்த்த பிரசாதமும் தருகிறார்கள் இத்தல ஆஞ்சநேயர் 'அபயஹஸ்த ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் ராமபிரான் அளித்த கணையாழியோடு அருள் பாலித்து வருகிறார் . தென்காசியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது கடையநல்லூர். இவருக்கு அடுத்து வரும் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

Similar News