பசு,ஓம் போன்ற வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு மின்சாரம் அடிக்கிறது - பிரதமர் மோடி

பசு,ஓம் போன்ற வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு மின்சாரம் அடிக்கிறது - பிரதமர் மோடி

Update: 2019-09-11 10:50 GMT

மதுரா உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற துய்மை பணியும் சேவையே, எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கால்நடைகளுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.


இந்தியா முழுவதும் கால்நடைகளுக்கு நோய்களை தடுப்பதற்காக நோய் தடுப்பு திட்டம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.12 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.


கால்நடைகளுக்கான இந்த திட்டத்தை உத்திரபிரேதேசம் மதுராவில் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி அதன் பின் அங்கு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:


சிலருக்கு சில வார்த்தைகளை கேட்டால் மின்சாரம் தாக்கியது போல அதிர்ச்சி அடைகிறார்கள். பசு,ஓம் என்ற வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு மின்சாரம் உடலில் தாக்கியது போல அதிர்ச்சி அடைகிறார்கள், அவர்களின் முடி சிலிர்க்கிறது. இது தவறானது


நம் நாடு 16-ம் நூற்றாண்டுக்கு சென்றது என சில சித்தரிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது .கிராம பொருளாதாரத்தை பேசுபவர்கள் கால்நடைகள் இல்லாமல் அதை ஒப்பிட முடியுமா.


நாட்டின் பொருளாதாரம் குறித்து கவலைப்படும் இந்த நேரத்தில், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகள் மற்ற உயிரினங்களை காப்பது மிகவும் முக்கியமானதுஎன்பதை நாம் உணர வேண்டும். பொருளாதார வளர்ச்சியும், இயற்கையை காப்பதும் ஒரே சீரான அளவில் இருக்க வேண்டும். என பேசினார் பிரதமர் மோடி




https://twitter.com/ANINewsUP/status/1171677221846749184

Similar News