விண்வெளியிலிருந்து இமயமலை.. அறிய படங்களும், சுவாரஸ்ய தகவல்களும்..

விண்வெளியிலிருந்து இமயமலை.. அறிய படங்களும், சுவாரஸ்ய தகவல்களும்..

Update: 2020-04-01 03:35 GMT

இந்தியாவிற்கு அழகூட்டும் நிலப்பரப்பு சார்ந்த விஷயங்களில் இமயமலையும் முக்கியத்துவம் வாய்ந்தது. இமய மலைத் தொடர்களில் பல்வேறு சிகரங்கள் 8000 மீட்டருக்கும் மேலான உயரம் கொண்டவையாக உள்ளன.

இமயமலை இந்தியாவில் நிலப்பரப்போடும் மற்றும் இந்திய மக்களின் ஆன்மீக வாழ்க்கையோடும் எண்ணற்ற தொடர்புகளைக் கொண்டது.

வற்றாத ஜீவ நதிகளில் பிறப்பிடமாகவும் மற்றும் பல அரிய வகை விலங்கினங்கள் சரணாலயமாகவும் இமயமலை திகழ்கிறது.

மேலும் இமயமலை பல்வேறு புதிர்களின் இருப்பிடமாகவும் காட்சி அளிக்கிறது.

இமயமலைச் சிகரங்கள் பல்வேறு மலையேற்ற வீரர்களின் சாகச பயணத்திற்கு அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது.

பூமியின் மேலே விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இமயமலைத் தொடர்கள் இவ்வளவு அழகாக காட்சி தரும் என்று கற்பனை செய்ததுண்டா? அதுபோன்ற ஒரு கேள்விக்குப் பதிலாக நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஒரு அழகான புகைப்படம் மூலம் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாலை நேரத்தில் இமயமலைச் சரிவுகளில் மீது சூரிய கதிர்கள் பட்டு ஆரஞ்சு நிறத்தில் ஜொலிப்பதை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் மூலம் விண்வெளி வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் 16, டிசம்பர் , 2019 ஆம் ஆண்டு அன்று எடுக்கப்பட்டது.


Image credit : NASA Earth observatory

இந்த புகைப்படத்தில் இமயமலைச் சிகரங்களான கஞ்சன் ஜங்கா சிகரம் மற்றும் யாலுங் மலைமுகடு ஆகியவை தெளிவாகத் தெரிகின்றன.

கஞ்சன் ஜங்கா சிகரமானது கடல்மட்டத்திலிருந்து 8500 மீட்டர் உயரம் உள்ளது.

இந்த புகைப்படம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இந்தியாவை கடக்கும்போது எடுக்கப்பட்டதாகும்.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமியை தொடர்ச்சியாக சுற்றிவந்து கொண்டுள்ளது. அங்கே பல்வேறு நாடுகளைச் சார்ந்த விண்வெளி வீரர்கள் பல நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவைச் சார்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா அவர்களும் கூட இந்த விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்று வந்துள்ளார்.

 


Similar News