இந்துக்கள் இந்துக்களின் கடைகளிலேயே பொருள் வாங்க வேண்டும் - இந்து முன்னணி.!

இந்துக்கள் இந்துக்களின் கடைகளிலேயே பொருள் வாங்க வேண்டும் - இந்து முன்னணி.!

Update: 2020-11-08 13:05 GMT


தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளின் போது இந்து சமுதாய மக்கள் இந்துக்கள் நடத்தும் கடைகளிலேயே பொருள்களை வாங்க வேண்டும் என்று தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போஸ்டர் ஒட்டியதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதில் "உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் என்ன தவறு. கிறிஸ்தவ அமைப்புக்கள் கிறித்தவர்கள் மட்டுமே மனு செய்ய வேண்டும் என விளம்பரம் செய்கின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடராத காவல்துறை இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என பதிவிட்டிருந்தார்.
அந்த போஸ்டரில் இந்துக்கள் அனைவரும் இந்த தீபாவளி முதல் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என்றும் நலிவடைந்து வரும் இந்து வியாபாரிகளை ஊக்குவிப்போம் என்றும் அன்னியப் பொருள்களை தவிர்ப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு தினத்தை ஒட்டி தமிழ் தேசிய அமைப்புகள் தமிழர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு/ விற்பனைக்கு தருவோம் என்றும் தமிழர்களின் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து பிரசுரங்கள் வழங்கின.

பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெறுப்பைப் பரப்பும் விதமான இந்த செயல்பாட்டைக் கண்டு கொள்ளாத காவல்துறை இந்துக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன் என்ற கேள்வியையும் இந்துக்கள் முன் வைக்கின்றனர். 

Similar News