திரிவேணி சங்கமம், தனுஷ்கோடி, ஸ்ரீரங்கம் மற்றும் காவிரியில் இருந்து அயோத்திக்குச் செல்லும் புனித நீர் மற்றும் மண்.!

திரிவேணி சங்கமம், தனுஷ்கோடி, ஸ்ரீரங்கம் மற்றும் காவிரியில் இருந்து அயோத்திக்குச் செல்லும் புனித நீர் மற்றும் மண்.!

Update: 2020-07-30 10:50 GMT

அயோத்தியில் ராம ஜன்ம பூமியில் ராமர் கோவில் கட்டும் பணியின் முதல் படியான பூமி பூஜை நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புனித தலங்களில் இருந்து நீர் மற்றும் மண் எடுக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்றும் இணையும் திரிவேணி சங்கம முக்கூடலில் இருந்தும் ஸ்ரீரங்கம் காவிரியில் இருந்தும் புனித நீர் ராம ஜன்ம பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ராமர் தனது வில்லால் ராமர் சேது பாலத்தை உடைத்த தனுஷ்கோடியில் இருந்தும் மண்‌ எடுத்து அனுப்பப்படுகிறது. இந்து முன்னணியினர் ராமேஸ்வரத்தில் ராமர்,சீதை மற்றும் அனுமன் மணலால் லிங்கம் செய்து வழிபட்டதாகக் கருதப்படும் இடத்தில் சிறப்பு பூஜை செய்து பிரசாதத்தை அனுப்பி வைக்க உள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத‌ஸ்வாமி விக்ரகம் ராமரால் வீபீஷணருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்றும் அதை வழியில் எங்கும் வைத்து விடாமல் இலங்கைக்கு எடுத்துச் செல்லுமாறு ராமர்‌ கூறிய நிலையில் இளைப்பாற வேண்டி காவேரிக் கரையில் விக்ரகத்தை கீழே வைத்த விபீஷணரால் அதை திருப்பி எடுக்க இயலவில்லை என்பதால் அங்கேயே கோவில் கொண்டு தெற்கு நோக்கிய நிலையில் இலங்கைக்கு அருள் பாலிக்கிறார் என்பது தல வரலாறு. எனவே இங்கிருந்தும் புனித மண்ணும் காவேரி நீரும் ராம ஜன்ம பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Similar News