உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.80 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங்

2021 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடியை எட்டும் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

Update: 2022-10-21 09:30 GMT

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடந்து வருகிறது. அதில் 'பாதுகாப்பு துறையில் உற்பத்தி செய்யுங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

தனியார் துறையினர், இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அவர்கள் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை கலைய எண்ணெயோ ராணுவ அமைச்சக அதிகாரிகளையோ தயக்கம் இன்றி சந்திக்கலாம். பெரிய கார்பெட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஆகியவையும் பாதுகாப்பு துறையிடம் கைகோர்த்து செயல்படுகின்றன.இது பாதுகாப்பு துறைக்கு ஒரு பொற்காலம். தற்போது உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 12 மில்லியன் டாலராக உள்ளது .2025 ஆம் ஆண்டுக்குள் இதை 22 பில்லியன் டாலராக 80,400 உயர்த்த மத்திய அரசும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.அந்த இலக்கையும் தாண்ட கூடும்.


பாதுகாப்பு துறையில் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. இத்துறையில் உலகத்தின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கியே இந்தியா நடைபோடுகிறது. பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறோம். முன்பெல்லாம் இத்துறையில் தனியாருக்கு கதவு திறந்து விடப்படவில்லை. முதலீட்டாளர்களில் யாராவது சுட்டுவிரல் நீட்டக்கூடும் என்ற பயத்தில் அவர்களை சந்திப்பதை ராணுவ மந்திரிகளும் அதிகாரிகளும் தவிர்த்து வந்தனர். எங்களுக்கு அந்த பயம் இல்லை. எங்கள் கதவுகள் முதலீட்டாளர்களுக்கு திறந்தே இருக்கின்றன.பாதுகாப்பும் வளர்ச்சியும் எதிர் எதிர் துருவங்களாக கருதப்பட்டன. சமூக பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் நமது பாதுகாப்புத் திறன்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கும் என்று கருதப்பட்டது .ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த எண்ணத்தில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது. இரண்டிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.





 


Similar News