வாட்ஸ் அப் போட்டோ.. வால் போஸ்டர்.. கொரோனா தொற்று வாலிபர் விழுப்புரம் போலீசாருக்கு கிடைத்தது எப்படி.? பக் பக் நிமிடங்கள்.

வாட்ஸ் அப் போட்டோ.. வால் போஸ்டர்.. கொரோனா தொற்று வாலிபர் விழுப்புரம் போலீசாருக்கு கிடைத்தது எப்படி.? பக் பக் நிமிடங்கள்.

Update: 2020-04-15 07:51 GMT

கொரோனா வைரஸ் தொற்றுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து காணாமல் போன டெல்லி வாலிபரை செங்கல்பட்டில் வளைத்து பிடித்தது விழுப்புரம் காவல்துறையினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் (டெல்லி வாலிபர்) 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி செவ்வாய்கிழமை கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 பேரை தொற்று இல்லை என்று வீட்டுக்கு அனுப்பியது மருத்துவமனை நிர்வாகம்.

அதற்கு அடுத்த நாள் கொரோனா தொற்று இல்லை என்று அனுப்பி வைக்கப்பட்ட 26 பேர்களில் 4 பேருக்கு தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை கேட்டு விழுப்புரம், கடலூர், மக்கள் மிகுந்த அச்சப்பட்டனர்.

இந்த 4 பேரில் 3 பேர் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் டெல்லி வாலிபர் மட்டும் கிடைக்கவில்லை. எங்கு சென்றார் என்பது தெரியாததால் போலீசார் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

இதன் பின்னர் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய்த் தொற்று தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

இதனிடையே வேலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு டெல்லி வாலிபரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் வாட்ஸ்அப், மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், விழுப்புரம் எஸ்.பி, ஜெயக்குமார் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் விழுப்புரம் முதல் சென்னை வரை 3 மொழிகளில் வால்போஸ்டர் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேடப்பட்ட நபர் செங்கல்பட்டு படாளம் பகுதியில் இருப்பதாக லாரி டிரைவர் மூலமாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதன் பின்னர் தனிப்படை போலீசார் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து ஆம்புலன்ஸ் மூலமாக விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Similar News