இனி எப்படி சரக்கு விக்கறீங்கன்னு பார்ப்போம் - கலால் துறை அதிரடி!

இனி எப்படி சரக்கு விக்கறீங்கன்னு பார்ப்போம் - கலால் துறை அதிரடி!

Update: 2020-04-17 14:19 GMT

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. மதுபானக்கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது.

கடந்த சில நாட்களாக கள்ளத் தனமாகவும், சட்ட விரோதமாகவும் அதிக விலையில் மதுபானங்களை விற்பனை செய்து வந்தவர்களை போலீசார் மற்றும் கலால் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.


இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்தனர். மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது கடைகளை திறந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக இதுவரை 22 மதுபானக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக கலால் துறையினர் சார்பில் பத்து தனிப்படைகள் அமைத்து அனைத்து மதுபான கடைகளிலும் உள்ள இருப்புகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

Similar News