நான்கு பேரை என்கவுண்டர் செய்த ஹைதராபாத் சம்பவம்! போலீசாருக்கு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை நன்றி!

நான்கு பேரை என்கவுண்டர் செய்த ஹைதராபாத் சம்பவம்! போலீசாருக்கு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை நன்றி!

Update: 2019-12-06 06:08 GMT


ஹைதராபாத்தில் சென்ற 27 ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது இரு சக்கர வாகனம் பழுதடைந்துள்ளது. அப்போது அங்கு வந்த 4 பேர் பைக்கை சரிசெய்வதாகக் கூறி நடித்து அந்தப் பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரை எரித்து கொலை செய்தனர்.


 இதையடுத்து சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து நடித்து காட்ட சொல்லி உள்ளனர்.


அப்போது கைதான 4 பேரும் போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை பிடிக்க முயற்சித்த போது துப்பாகி சூடு நடைபெற்றுள்ளது.


அதைத் தொடர்ந்து 4 பேரையும் தெலங்கானா போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் சுட்டுக் கொலை செய்ததாக போலீசார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.


இந்த என்கவுண்டர் சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


இந்த நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்ட டாக்டரின் தந்தை ஸ்ரீதர், போலீசாரின் இந்த என்கவுண்டர் சம்பவத்தை பாராட்டுவதாகவும், அரசுக்கும், போலீசுக்கும் எனது பாராட்டு மற்றும் நன்றி என்றார். மேலும் தனது மகளின் ஆத்மா இனிமேல் தான் சாந்தி அடையும் என்றும் கூறினார்.


Similar News