'மீண்டும் உங்களை சந்திப்பேன்' - அமெரிக்கா சிகிச்சைக்கு செல்லும் முன் கண்ணீர் மல்க டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் பேட்டி

'மீண்டும் உங்களை சந்திப்பேன் என்னை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என அமெரிக்க புறப்படுவதற்கு முன் டி.ராஜேந்தர் கண்ணீர்மல்க விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2022-06-15 01:49 GMT

'மீண்டும் உங்களை சந்திப்பேன் என்னை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என அமெரிக்க புறப்படுவதற்கு முன் டி.ராஜேந்தர் கண்ணீர்மல்க விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதால் அவரை அவரது மகன் நடிகர் சிம்பு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவ விசா பெறப்பட்டு நடிகர் டி ராஜேந்தர் நேற்று அமெரிக்கா கிளம்பினார் கிளம்பும் முன்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 'என் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் என் உடல் நலம் பற்றி நல்லபடியாக செய்தி பகிர்ந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி! என்னைப் பற்றிய சில வதந்திகள் பரவி உள்ளது அதனால் தான் இன்று செய்தியாளர்களை சந்திக்க விரும்பினேன். விதியை மீறி எதுவும் நடக்காது எனக்காக பிரார்த்தனை செய்த கட்சிக்காரர்களின், என் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்னோட அபிமானிகள் அனைவருக்கும் நன்றி. மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்.

நான் இன்று வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கு காரணம் எனது மகன் சிலம்பரசன் தான், அவன் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்' இவ்வாறு டிராஜேந்தர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

Similar News