'போதைப் பொருள் நடமாட்டத்தை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் நிறுத்தியே தீருவேன்'- பிரதமர் மோடி!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதமர் மோடியின் ஆவேச பேச்சும் தேர்தல் பிரச்சாரமும்.

Update: 2024-04-17 09:51 GMT

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் ,ராதிகா சரத்குமார் ,ஜான் பாண்டியன், எஸ்.டி.ஆர், விஜய் சீலன் விளங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது "இனிய தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். இந்த புண்ணிய பூமி ஆன திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதியை வணங்குகிறேன்" என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது :-

தமிழ் புத்தாண்டில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நல்ல பல திட்டங்களை சொல்லியுள்ளோம். மூன்று கோடி திட்டங்கள், முத்ரா திட்டத்தில் அதிகமானோருக்கு கடன் விவசாயம், மீன்வளத்துறை கடல் பாசி முத்து வளர்ப்புக்கு உதவிகள் என்று பல்வேறு திட்டங்களை சொல்லியுள்ளோம். வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும். நெல்லை சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்குகிறது. மிக விரைவில் புல்லட் ரயில் தொடங்குவோம். தமிழ் மொழியை நேசிக்கும் எல்லோரும் பாஜகவின் நேசிக்க ஆரம்பித்துள்ளீர்கள் .இதனால் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழிக்கு உலக அங்கீகார பெறப்படும் என சொல்லியுள்ளோம்.

தமிழகத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற வைப்போம். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும். திமுக காங்கிரஸ் கூட்டணியினர் கச்சத்தீவை துண்டித்து வேறு நாட்டுக்கு கொடுத்துள்ளனர் .இவர்கள் செய்த துரோகத்தால் மீனவர்கள் பல தலைமுறைகளாக தண்டிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு போதையை நோக்கி செல்கிறது. இங்கு

குடும்ப அரசியலில் உள்ளவர்கள் அதை ஊக்குவிக்கிறார்கள் .பல கோடிக்கு போதை வர்த்தகம் நடக்கிறது . போதைப்பொருள் மாஃபியா யாருடைய பாதுகாப்பில் இருக்கிறது என்பது குழந்தைக்கு கூட தெரியும். போதை பொருள் நடமாட்டத்தை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இதை வேடிக்கை பார்க்க மாட்டேன் .இந்த தேர்தல் பிரச்சார கூட்டம் தான் நடப்பு தேர்தலுக்காக தமிழகத்தை நான் சந்திக்கும் கடைசி கூட்டமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


SOURCE :Dhinatamizh

Similar News