கள்ளக்குறிச்சியில் திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் - வெளிவந்த பகீர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து திருடப்பட்ட ஆறு பழமையான சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-25 05:03 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து திருடப்பட்ட ஆறு பழமையான சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் இருந்து காணாமல் போன புராதான இந்து மத கடவுள்களின் கல் மற்றும் உலோகத்தினால் ஆன சிலைகள் அயல்நாடுகளில் இருப்பது ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட பிரதமர் மோடியிடம் அமெரிக்கா சில அபூர்வ சிலைகளை ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த ஆறு உலோகம் சிலைகள் 900 ஆண்டுகள் பழமையானது எனவும் அவை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபுரம் சிவன் கோவிலுக்கு சொந்தமானவை எனவும் அறியப்பட்டுள்ளது.

இந்த ஆறு தொன்மையான சோழர்கால சிலைகளை அமெரிக்காவிலிருந்து மீட்டெடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் விரைவில் இந்த சிலை தமிழகம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source - Polimer

Similar News