ராகுல் காந்தி வேண்டுமானால் அணுகுண்டுக்கு பயப்படட்டும் நாங்கள் பயப்பட மாட்டோம்- அமித்ஷா துணிச்சல் பதிலடி!
ராகுல் காந்தி வேண்டுமானால் அணுகுண்டுக்கு பயப்படட்டும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று அமித்ஷா கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சமீபத்தில் பேசிய ஒரு வீடியோ வெளியானது. அதில் பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அதை இந்தியா மதிக்க வேண்டும். அணுகுண்டு இருக்கிறது. அதை சீண்டி கொண்டே இருந்தால் இந்தியா மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசிவிடும் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமீர்ஜான் என்று பதில் அளித்தார். உத்திர பிரதேச மாநில பிரதாப்கரில் கவுசாம்பி தொகுதி பா ஜனதா வேட்பாளர் வினோத் சொங்கருக்கு ஆதரவாக நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராகுல் காந்தி அவர்களே நீங்கள் அணுகுண்டுக்கு பயப்பட விரும்பினால் பயப்பட்டுக் கொள்ளுங்கள்.நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை எடுத்துக் கொள்வோம். இந்த தடவை கவுசாம்பி தொகுதி மூன்று ஹாட்ரிக்குகளை உறுதி செய்யும். முதலில் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பிரதமர் ஆவார். இரண்டாவது ஹாட்ரி மூன்றாவது தடவையாக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி ,பகுஜன் சமாஜ்வாடி ,பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் துடைத்தெறியப்டும் .மூன்றாவது ஹாட்ரிக் என்னவென்றால் கவுசாம்பி தொகுதியில் என் நண்பர் வினோத் சொங்கர் மூன்றாவது தடவையாக எம்.பி ஆவார். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI