நம் நாட்டின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இருப்பார் - நம்பிக்கையுடன் கூறும் பிரதமர் மோடி

புதிய ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக செயல்படுவார் என பிரதமர் மோடி விடுத்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-22 04:10 GMT

புதிய ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக செயல்படுவார் என பிரதமர் மோடி விடுத்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார் என அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முறைப்படி அறிவித்தார்.


திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியினரின் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, 'சமூகத்திற்காகவும் ஏழை அடித்தட்டு விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் திரௌபதி முர்மு. ஒரு நல்ல நிர்வாகம் அனுபவத்தை பெற்றவரான அவர் கவர்னராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். கொள்கையைச் விஷயங்கள் குறித்து அவரின் அனுபவம் நம் நாட்டுக்கு பெரிதும் பயனளிக்கும் நம் நாட்டின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இருப்பார் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.



Similar News