தடை செய்யப்பட்ட CamScannerக்கு மாற்றான இந்தியப் பயன்பாடு - பிரபலமடைந்து வரும் Kaagaz Scanner.! @KaagazS #VocalForLocal

Kaagaz Scanner என்ற பெயருள்ள அந்த இந்தியப் பயன்பாடு, ஏற்கனவே 5 லட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது.

Update: 2020-07-29 12:43 GMT

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவ மோதல்களுக்குப் பிறகு, சீனா மீது பொருளாதாரம், ராணுவம், ராஜ தந்திரம் என பலமுனைப் போரை இந்தியா தொடங்கியது. அதில் ஒரு பகுதியாக சீனப் பயன்பாடுகள் 59, மற்றும் அதன் குளோன்கள் 47 என இந்தியா வளைத்து வளைத்து தடை செய்தது.

அதில் பிரபலமானப் பயன்பாடாக டிக்டோக் கருதப்பட்டாலும், டாக்குமென்டுகளை ஸ்கேன் செய்ய உதவும் CamScanner எனும் சீனப் பயன்பாடும் பிரபலமாக இருந்தது. அதைத் தடை செய்த பின், அதற்கு பதிலாக இந்தியப் பயன்பாடுகளை பலரும் தேடி வந்தனர். இந்திய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அத்தைகைய பயன்பாடு ஒன்று பிரபலமடைந்து வருகிறது.

அவற்றைக் குறித்த தகவலை பகிர்ந்து கொண்ட இளம் பா.ஜ.க தலைவர் SG சூர்யா, இது போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தும் படி கேட்டுக்கொண்டார்.



Kaagaz Scanner என்ற பெயருள்ள அந்த இந்தியப் பயன்பாடு, ஏற்கனவே 5 லட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. விமர்சனங்களில் பெரும்பாலும் பாராட்டுகளும், இன்னும் முன்னேற்றமடைவதற்கான குறிப்புகளும் பயனர்களால தரப்பட்டுள்ளன.



கூகுள் ஸ்டோரில் அதன் லிங்க் --> https://play.google.com/store/apps/details?id=kaagaz.scanner.docs.pdf

ஆதரவளிப்போம்.

Similar News