புதுச்சேரியில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க 13 வகையான காய்கறிகள் அடங்கிய பேக், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. மக்கள் வரவேற்பு..

புதுச்சேரியில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க 13 வகையான காய்கறிகள் அடங்கிய பேக், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. மக்கள் வரவேற்பு..

Update: 2020-04-04 11:57 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகின்ற 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்க கடைகளுக்கு வரும் மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், வைரஸ் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது.


இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி புதுச்சேரி அருகே சுல்தான்பேட்டையில் உள்ள ஒருகாய்கறி கடையில், 13 வகையான காய்கறிகள் அடங்கிய பேக்,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி தலா அரை கிலோ, கால் கிலோ கேரட், பீன்ஸ், பீட்ரூட், தலா 200 கிராம் நுாக்கல், சவ்சவ், கத்தரிக்காய், 100 கிராம் பச்சை மிளகாய், இஞ்சி, சிறிய காலிபிளவர், பீக்கங்காய், புடலங்காய், கோஸ், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை ஆகியவை உள்ளன. இந்த பேக்கின் மொத்த எடை 5 கிலோ வரை உள்ளது. பொதுமக்கள் சில நிமிடங்களிலேயே காய்கறி பேக் வாங்கிக்கொண்டு செல்வதால் கூட்டம் தவிர்க்கப்படுகிறது.



புதுச்சேரி அரசும் இந்த கடையில் இருந்து 100 ரூபாய் காய்கறிகள் அடங்கிய பேக்கை மொத்தமாக கொள்முதல் செய்து, திருக்கனூர், பத்துகண்ணு, திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் தற்போது மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Similar News