ஈரானுக்கு எதிராக விதித்துள்ள தடைகளிலிருந்து இந்தியாவுக்கு அளித்துள்ள விலக்கு : இந்தியா ஆய்வு

ஈரானுக்கு எதிராக விதித்துள்ள தடைகளிலிருந்து இந்தியாவுக்கு அளித்துள்ள விலக்கு : இந்தியா ஆய்வு

Update: 2018-11-10 19:08 GMT
அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக விதித்துள்ள தடைகளிலிருந்து இந்தியாவுக்கு அளித்துள்ள விலக்கு குறித்த விவரங்களை இந்தியா ஆய்வு செய்து வருவதாக  தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஒப்பந்தம் என்று அறியப்படும் விரிவான கூட்டு செயல் திட்டத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதையடுத்து, அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் அதுசார்ந்த உணர்வுபூர்வமான விஷயங்களை அமெரிக்கா கருத்தில் கொண்டு விதிவிலக்கு அளித்துள்ளதை இந்தியா பாராட்டுகிறது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார். ஈரானிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா என்றும், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதே போல், ஆஃப்கானிஸ்தானுக்கு நீண்டகாலப் பலன்கள் மற்றும் வெளியுலகத் தொடர்புகளை அளிப்பதில் சபஹார் துறைமுக மேம்பாட்டின் முக்கியத்துவத்தை அமெரிக்கா அங்கீகரித்து அதற்கும் விலக்கு அளித்தது குறித்து திருப்தியை வெளியிட்டார்.
Source : AIR News

Similar News