எதிரிகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் அஸ்த்ரா ஏவுகணை!

எதிரிகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் அஸ்த்ரா ஏவுகணை!

Update: 2019-11-22 12:20 GMT

போர் விமானங்கள் பங்குபெறும் வான்வெளி யுத்தங்கள் அந்த காலங்களில் ஆகாயத்தில்
நடக்கும் துப்பாக்கிச்சண்டை போலவே இருக்கும். இதில் வெற்றி தோல்வி என்பது
பெரும்பாலும் விமானியின் திறமை மற்றும் சாதுர்யமான செயல்பாட்டையும் விமானத்தின்
தன்மையுமே சார்ந்து இருக்கும். இப்போது விமானங்கள் சுடுவதற்கு பதிலாக ஏவுகணைகளை
ஏவ போகின்றன, ரேடார்கள் மற்றும் சென்சார்கள் துணைகொண்டு தாக்குதல் நடத்தி இன்று
பல படிநிலைகளை கடந்து சென்றிருக்கிறது.


அந்தக் காலங்களிலேயே அமெரிக்காவின் AIM-9 மற்றும் சோவியத்தின் K-13 போன்ற ஆரம்ப
நிலை சிறிய ரக ஏவுகணைகள் குறிப்பிட்ட கதிரியக்கத்தை தொடர்ந்து சென்று தாக்கக்
கூடியதாக இருந்தன, ஆனால் அவைகளால் நீண்ட தூரம் பயணிக்க இயலாமல் இருந்தன.
இன்று ஏவுகணை தொழில் நுட்பம் பல மடங்கு உயர்ந்து நிற்கிறது. இன்றைய தலைமுறை
ஏவுகணைகள் காட்சி வரம்பிற்கு அப்பால் பல கிலோ மீட்டர் ( Air to Air) சென்று தாக்கும் சக்தி
படைத்திருக்கின்றன.
இந்தியா இந்த வகையான ஏவுகணையை முதன்முதலாக சொந்த தயாரிப்பில் உருவாகி
இருக்கிறது. “’அஸ்த்ரா “ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை இந்த வகையான
ஏவுகணையின் தூரத்தை 160 கிலோமீட்டர் அதிகப்படுத்தியிருக்கிறது. (DRDO) இந்தியாவின்
ராணுவ ஆய்வு கழகம் முன்பை விட இரண்டு மடங்கு தூரத்தில் சென்று தாக்கக்கூடிய இந்த
அஸ்திரா ஏவுகணை 50-30 MKI விமானங்களில் பொருத்தப்படும். DRDO வின் தலைவர் ஜீசஸ்
ரெட்டி இதை அறிவித்திருக்கிறார். இந்த வகை ஏவுகனை ஒரு அணு ஆயுத தாக்குதலில்
இருந்து காப்பாற்றும் தன்மை உடையது. இந்தியாவின் ஏவுகணை தொழில் நுட்ப வளர்ச்சி
திட்டங்கள் (BMD Programme) படிப்படியாக வளர்ந்து தற்போதைய தலைமுறை நவீன
ஏவுகணையை தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.


அஸ்திரா ஏவுகணை எப்படி செயல்படும்? அஸ்திரா என்கிற சமஸ்கிருத வார்த்தையின்
அர்த்தமே “கணை “ என்பது தான். இந்த நவீன தொழில்நுட்பத்தில் பயணிக்கக் கூடியது.
நுண்ணிய அதிர்வலைகளின் அலைவரிசைகளை கண்டுணர்ந்து பயணிக்கக் கூடியது. இந்திய
ராணுவ ஆராய்ச்சி மையம் இந்தத் . “அஸ்த்ரா “ ஏவுகணை திட்ட த்தின் கீழ் மேலும் பல
தொழில்நுட்பங்களை ஏற்படுத்த முனைந்துள்ளது


Similar News