இந்தியா தான் உண்மையான நட்பு நாடு! ஆப்கன் பாப் ஸ்டார் பெருமிதம்!
ஆப்கானிஸ்தான் பாப் நட்சத்திரமான ஆர்யானா சயீது, இந்தியா தான் உண்மையான நட்பு நாடு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் பாப் நட்சத்திரமான ஆர்யானா சயீது, இந்தியா தான் உண்மையான நட்பு நாடு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்து விட்டனர். இதனால் பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியில் வரக்கூடாது. பெண்கள், கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது.
மேலும், சினிமா, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடக் கூடாது என்பது தாலிபான் பயங்கரவாதிகளின் சட்டம். இதனை எதிர்த்து ஆர்யானா சயீது பாப் ஸ்டாராக வலம் வந்தார். அவருக்கு தாலிபான்களால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய ஆர்யானா சயீது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் மட்டுமே காரணம்.
அவர்கள் தாலிபான்களை வளர்த்து விடுகின்றனர். இனிமேலாவது ஆப்கானிஸ்தான் அரசியல் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடாமல் இருக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கு முயற்சிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து ஆப்கன் விவகாரத்தில் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தியா எப்போதுமே ஆப்கானிஸ்தானுக்கு சிறந்த நண்பனாக இருக்கிறது. எங்கள் நாடு மற்றும் மக்கள் மீது அதிகமான அக்கறையுடன் செயல்படுகிறது. நாங்கள் இந்தியாவுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2829678