ஜெர்மன் - இந்தியாவுடன் மேம்பட்ட இராஜாங்க உறவு : 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு சாதனை.!

ஜெர்மன் - இந்தியாவுடன் மேம்பட்ட இராஜாங்க உறவு : 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு சாதனை.!

Update: 2019-11-01 15:41 GMT

புதுதில்லியில் இன்று ஜெர்மன் பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெர்மன் பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா – ஜெர்மனி இடையிலான இருதரப்பு உறவுகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான அடிப்படை நம்பிக்கையைக் கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைகளின் பங்கைப் பாராட்டிய பிரதமர், இந்தத் தனித்துவமான முறை இந்தியா – ஜெர்மனி இடையே, புதிய மற்றும் நவீன தொழில்நுட்பம், மின்னணு போக்குவரத்து, எரிசக்திப் பிரிவுத் தொழில்நுட்பம், பொலிவுறு நகரங்கள், உள்நாட்டு நீர்வழிகள், கடலோர மேலாண்மை, ஆறுகளைத் தூய்மைப்படுத்துதல், சுற்றுப்புறப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளது என்றார்.


இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் அவரது குழுவினரை வரவேற்ற பிரதமர், ஜெர்மன் பிரதமர் மெர்க்கல் இந்தியா – ஜெர்மனி உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றினார் எனத் தெரிவித்தார்.


ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளில் இந்தியா உறுப்பு நாடாக ஆதரவளி்த்த ஜெர்மனிக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும், மற்றும் இதர சர்வதேச அமைப்புகளிலும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இருநாடுகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் கூறினார்.


Similar News