உலக அளவில் தொலை தொடர்பு முதலீடுகளில் இந்தியா முதலிடம் ! டிஜிட்டல் வளர்ச்சியில் 48 ஆம் இடத்தில் இருந்து 44 வது இடத்தையும் பிடித்து சாதனை!!

உலக அளவில் தொலை தொடர்பு முதலீடுகளில் இந்தியா முதலிடம் ! டிஜிட்டல் வளர்ச்சியில் 48 ஆம் இடத்தில் இருந்து 44 வது இடத்தையும் பிடித்து சாதனை!!

Update: 2019-09-27 04:52 GMT

உலகில் 200 க்கும் அதிகமான நாடுகள் உள்ளன. இந்த நிலையில் உலகளாவிய டிஜிட்டல் அறிவு சார்ந்த போட்டியில் 48 ஆம் இடத்தில் இருந்து  44 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஒரே ஆண்டில் நான்கு இடங்களை நோக்கி முன்னேறி இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது ஒரு சிறந்த சாதனையாகும் என்றும் இந்தியா அறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கும் ஆராய்வதற்கும் தயார் நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் உலகளாவிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய ஆண்டு தரவரிசையுடன் ஒப்பிடும்போது, அறிவு, தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால தயார்நிலை என அனைத்து விஷயங்களிலும் இந்தியா ஒட்டுமொத்த முன்னேற்றம் கண்டுள்ளதால் 2018 ஆம் ஆண்டில் 48 வது இடத்திலிருந்து இருந்து முன்னேறி இந்த ஆண்டு 44 வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


ஐ.எம்.டி உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசை 2019 ((WDCR)) படி, தொழில்நுட்ப துணை காரணிகள் அளவில் மிகப்பெரிய முன்னேற்றத்துடன், தொலை தொடர்பு முதலீட்டில் முதல் இடத்தைப் இந்தியா பிடித்துள்ளது. இதனால் 2019 ல் 44 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


டிஜிட்டல் போட்டி பொருளாதாரத்தில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இந்த பட்டியலில் ஸ்வீடன் மூன்றாவது இடத்தையும், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து முறையே 4 மற்றும் 5 வது இடங்களையும் பிடித்தன.


டிஜிட்டல் முறையில் போட்டியிடும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் 6 வது இடத்தில் நெதர்லாந்து, பின்லாந்து (7 வது), ஹாங்காங் எஸ்ஏஆர் (8 வது), நார்வே(9 வது) மற்றும் கொரிய குடியரசு (10 வது) ஆகியவை அடங்கும்.


ஒட்டுமொத்த தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சீனா கண்டுள்ளது. சென்ற ஆண்டு 30 வது இடத்தில் இருந்த சீனா எட்டு இடங்களை பின்னுக்குத் தள்ளி 22 வது இடத்தை பிடித்துள்ளது. துரதிஷ்டவசமாக இந்தோனேசியா 62 இடத்தில் இருந்து 56 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.


திறமை, பயிற்சி மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவற்றில் "இந்தியா மற்றும் இந்தோனேசியா முறையே நான்கு மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன,  இந்த நாடுகள் நேர்மறையான முடிவுகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றால் நல்ல நிலைக்கு உயர்ந்து வருவதாக ஐஎம்டி உலக போட்டி மையத்தின் இயக்குனர் ஆர்ட்டுரோ பிரிஸ் கூறினார். ஐஎம்டி உலக போட்டி மையம் தயாரித்துள்ள தரவரிசைகள் உலக நாடுகளின் திறனையும், முன்னேற்றத்தையும் அளவிட உதவுகிறது.


Source : https://economictimes.indiatimes.com/tech/internet/india-rises-4-places-to-44th-rank-in-world-digital-competitiveness-rankings/


Similar News