வர இருக்கும் 'இந்தியா இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம்'.. கலக்கும் சென்னை IIT..

சென்னை IITயுடன் இஸ்ரேல் இணைந்து ‘இந்தியா – இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம் ’ அமைக்கப்பட உள்ளது.

Update: 2023-05-18 00:15 GMT

சென்னை ஐ.ஐ.டியில் நீர்வள நிர்வாகம் மற்றும் தண்ணீர் தொழில்நுட்பங்களில் ஆய்வு மேற்கொள்ள ‘ இந்தியா – இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்ப மையம் ’ அமைக்கப்பட உள்ளது. இதில் இஸ்ரேல் அரசுடன் சென்னை ஐஐடி பங்குதாரராக இருக்கும். இதற்கான விருப்பக்கடிதம் மே 9 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது. இதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் மனோஜ் ஜோஷி, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஏலி கோஹென் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்திய நீர் ஆதாரத்துறையில் தீர்வுகளுக்கான நீடித்த நிர்வாகப் பணி, இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இஸ்ரேலில் மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள் அமலாக்கத்தை உறுதி செய்வது ஆகியவை இந்த புதிய மையத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மையம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அம்ருத் இயக்க இலக்குகளை அடைவதற்கு உதவி செய்யும். மேலும் தனித்த ஒப்பந்தங்கள் மூலம் தொழில்நுட்பத் தீர்வுகளை அமல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற உதவும்.


இந்த மையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, மனிதகுலத்திற்கு இயற்கை அன்னையின் மகத்தான கொடையாகத் திகழும் தண்ணீரை முறையாக பயன்படுத்துவதற்கும், சேமிப்பதற்குமான பணியில் இது மிகவும் முக்கியமான ஒத்துழைப்புகளில் ஒன்று என தாங்கள் கருதுவதாகக் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News