சீனாவின் மாபெரும் சதிவேலையை முறியடித்து வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்கள் - 16000 அடி பள்ளத்தாக்கில் நடந்த கோர சம்பவம்!

சீனாவின் மாபெரும் சதிவேலையை முறியடித்து வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்கள் - 16000 அடி பள்ளத்தாக்கில் நடந்த கோர சம்பவம்!

Update: 2020-06-18 10:39 GMT

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அமைக்க முயன்ற பணிகளை தடுக்கும் போது ஏற்பட்ட மோதல் மற்றும் அதனால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற காரணங்களால் தான் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணத்தை தழுவினர் என்பது தெரியவந்துள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின்  நடமாட்டம் மற்றும் ரோந்துப் பகுதிகளை கண்காணிக்க, பாயின்ட் 14 என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் அத்துமீறி கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த கண்காணிப்பு கோபுரம் வாயிலாக இந்திய இராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்காணிப்பதே சீன ராணுவத்தின் திட்டம். அதே போன்று DBO சாலையில் இந்திய ராணுவ வாகனங்களின் போக்குவரத்தை தடுக்கவும் சீன ராணுவம் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படைப் பிரிவு முயன்றது. அப்போது அங்கு சீனா ஏராளமான இராணுவத்தினரை குவித்ததை அடுத்து இருதரப்பும் கற்கள் மற்றும் கட்டைகளால் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டனர். அத்துடன் 600 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் நின்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது..

இதில், இருதரப்பிலும் பலர் கால்வான் நதியில் விழுந்தனர். கால்வான் நதியில் ஓடிய ஐஸ் போன்ற நீர் மற்றும் அப்பகுதியில் நிலவிய உறையவைக்கும் குளிர் உள்ளிட்ட காரணங்களால், 16000 அடி உயரமுள்ள கால்வான் பள்ளத்தாக்கில், ஒதுங்க வழியின்றி உடலை உறையவைக்கும் ஈர உடைகளுடன், எல்லையை காக்கும் பணியில் நமது வீரர்கள் வீர மரணத்தை தழுவினர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Similar News