இந்தியா சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பண பட்டுவாடா முறை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியா சிங்கப்பூர் இடையேயான டிஜிட்டல் பண பட்டுவாடா முறையை பிரதமர் மோடியும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் தொடங்கி வைத்தனர்.
இந்தியாவில் யு.பி.ஐ என்ற பெயரில் டிஜிட்டல் பணபட்டுவாடா வரை நடைமுறையில் உள்ளது. இதேபோன்று சிங்கப்பூரில் 'பேநவ்' என்ற பெயரில் டிஜிட்டல் பண்ண பட்டுவாடா முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவின் 'யு.பி.ஐ ' மற்றும் சிங்கப்பூரின் 'பேநவ்' ஆகியவற்றை ஒருங்கிணைத்து இரு நாடுகள் இடையேயான டிஜிட்டல் பண பட்டுவாடாவுக்கு வகை செய்ய முடிவு செய்யப்பட்டது. இவ்விநாடுகளின் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை இணைப்பு நிகழ்ச்சி காணொளி காட்சி வழியாக நேற்று நடைபெற்றது. இதை பிரதமர் மோடியும் சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லுங்கும் தொடங்கி வைத்தனர.
இந்தியர்களுக்கும் இந்தியாவால் சிங்கப்பூர் மக்களுக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். அவர்கள் இந்த முறையில் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு எளிதாகவும் விரைவாகவும் குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்ப முடியும். இதேபோன்று இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்களும் தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு குறைவான கட்டணத்தில் பணம் அனுப்புவது விரைவாகும் .எளிதாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவதில் கூறியதாவது :-
இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் 74 பில்லியன் எண்ணிக்கையில் யு.பி.ஐ.பண பட்டுவாடா நடந்துள்ளது. இதன் மூலம் ரூபாய் 126 ட்ரில்லியன் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. நமது நாட்டில் விரைவில் ரொக்க பண பட்டுவாடாவை டிஜிட்டல் பண்ண பட்டுவாடா மிஞ்சிவிடும் என்று பல நிபுணர்கள் கனித்துள்ளனர். ஏராளமான அளவில் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பட்டுவாடா நடந்திருப்பது, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பண பட்டுவாடா முறை பாதுகாப்பானது என்பதை காட்டுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.