2014 ஆம் ஆண்டு 6 % இருந்த பணவீக்க விகிதம், தற்போது 3.5 % அளவுக்கு குறைக்கப்பட்டது - உலக பொருளாதார மந்தத்தை தாண்டி இந்தியா சாதனை!

2014 ஆம் ஆண்டு 6 % இருந்த பணவீக்க விகிதம், தற்போது 3.5 % அளவுக்கு குறைக்கப்பட்டது - உலக பொருளாதார மந்தத்தை தாண்டி இந்தியா சாதனை!

Update: 2019-09-16 08:52 GMT
பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த சென்ற மாதம் 23, 30 ஆகிய தேதிகளில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் வங்கி தொடர்பான 32 அறிவிப்புகளில், 6 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வட்டி விகிதங்கள் குறைப்பு வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 143 (3ஏ) படி, இணையம் மூலம் மதிப்பீடு செய்யும் திட்டத்தால் மனிதர்கள் மூலமான மதிப்பீட்டு நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தகவல்களும் இணையம் வழியாகவே பெறப்படுகின்றன.
நிதிப்பற்றாக்குறையை குறைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2014-15-ல் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.1 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை 2018-19-ல் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.
குறைவான பணவீக்க விகிதம்:
நுகர்வோர் விலை பணவீக்க விகிதம், உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் குறைவாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் சென்ற ஆண்டு 3.5 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.
சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்த மொத்த பணவீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக குறைந்துள்ளது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டெண் சென்ற நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 3 சதவீத அளவை எட்டியுள்ளது. எஃகு, சிமெண்ட் ஆகிய துறைகளில் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Similar News