தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற இந்திய பெண்
தொடர்ந்து இரண்டாவது முறையாக மலையாள பெண் ஒருவர் அமெரிக்காவில் நீதிபதி பதவி ஏற்றுள்ளார்.
அமெரிக்காவில் சமீபகாலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஜூலி. ஏ.மேத்யூ இவர் கேரள மாநிலம் திருவிழாவை சேர்ந்த மலையாள பெண் ஆவர். கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராம பள்ளிக்கூடத்தில் படித்து வந்த இவர் இன்றைக்கு நீதிபதியாக உயர்ந்திருப்பது சுவாரஸ்யமானது. இவரது தந்தை இங்கே தொழிலதிபர். அவர் சில வழக்குகளை எதிர் கொண்ட போது தான் இந்த பெண்ணுக்கு முதன்முதலாக சட்டம் படிக்கும் ஆர்வவம் துளிர்விட்டு இருக்கிறது. பிலடெல்பியா மாகாணத்தில் வளர்ந்த அவர் பென் மாகாண பல்கலைக்கழகத்திலும் டெலவாரே சட்டக் கல்லூரியிலும் படித்து வக்கீல் ஆனார். 15 வருடங்கள் வக்கீலாக பணியாற்றினார். நான்காண்டுகளுக்கு முன்னர் நீதிபதி ஆனா.ர் இதன் மூலம் அங்கு முதல் இந்திய வம்சாவளிப்பை நீதிபதி என்ற பெயரை பெற்றார். இப்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் பென்ட் கவுண்டியில் நீதிபதியாக இருக்கிறார்.
இந்த பதவிக்ககாக நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கியவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ டார்ன்பர்க்கை வீழ்த்தி வெற்றி கண்டு இருக்கிறார். இதன் மூலம் அங்கு இன்னும் நான்கு ஆண்டுகள் நீதிபதி பதவி வகிப்பார். கேரளாவில் தனது கணவரின் சொந்த கிராம வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி வழியாக போர்ட் பென்ட் கவுண்டி நீதிபதியாக அவர் பதவியேற்றார். இது பற்றி அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-
இந்தமுறை நான் என் கணவரை வீட்டில் வைத்து பதவி ஏற்க தான் விரும்பினேன். இல்லாவிட்டால் இந்த நிகழ்வில் என் கணவர் குடும்பத்தார் பங்கேற்க முடியாமல் போயிருக்கும். இந்த பதவியேவேற்பு விழாவில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதுதான் எனது சிறந்த வேலை அந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். என் கணவர் , பெற்றோர் அனைவரும் எனக்கு மகத்தான ஆதரவு தந்து தூண்களாக திகழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார் .அதே நேரத்தில் இந்த விழாவில் அவரது பெற்றோரும் மூத்த மகளும் அமெரிக்காவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இவரது கணவர் அமெரிக்காவில் தொழிலதிபராக உள்ளார்.