இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாடு - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறும் ஆச்சர்ய தகவல்

'மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவை அமல்படுத்துவது அவசியமானது' என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-28 02:13 GMT

'மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவை அமல்படுத்துவது அவசியமானது' என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவை அமல்படுத்துவது அவசியமானது என்றும், அதனை மீறுவோர்க்கு அரசு சலுகைகளையும், ஓட்டுநர் உரிமையும் வழங்கக்கூடாது எனவும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறியதாவது, 'மக்கள்தொகை கட்டுப்படுத்த சீனா ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்தியது. அதன் மூலம் வளர்ச்சியும் நடந்ததாக கூறினார். சீனாவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கும் நிலையில் இந்தியாவில் 30 குழந்தைகள் பிறப்பதாகவும் இப்படி இருக்கும் பொழுது எவ்வாறு சீனாவுடன் நாம் போட்டி போட முடியும்? எனவும் கிரிராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

1978 இல் இந்தியாவை விட ஜி.டி.பி குறைவாக இருந்த சீனா ஒரு குழந்தை கொள்கை அமல்படுத்திய மக்கள் தொகையில் சுமார் 60 கோடியை கட்டுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Source - Polimer News

Similar News