மந்த நிலையிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் எனவும் விலைவாசியை குறைக்கும் வகையில் பட்ஜெட் அமையும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2022-10-14 06:06 GMT

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் எனவும் விலைவாசியை குறைக்கும் வகையில் பட்ஜெட் அமையும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வாஷிங்டனின் பல்கலைக்கழகத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 45 சதவிகித அளவிற்கு முத்ரா கடன் தொகைகள் மகளிருக்கு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். முன்பு வெளிநாடுகளை சார்ந்திருந்த இந்தியா இன்று டிஜிட்டல், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் புதிய எல்லையை தொட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்தியாவில் தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த அரசு நிர்வாகம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவின் 5 ஜி சேவை தனித்துவமானது எனக் கூறியவர் மற்ற நாடுகளுக்கு இந்தியா தனது 5 சேவை வழங்க தயார் எனவும் உறுதியளித்தார்.

முன்னதாக சர்வதேச நாணயம் நிதியம் மற்றும் உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் உரை நிகழ்த்திய நிர்மலா சீதாராமன் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஏழு சதவீத வளர்ச்சி இந்தியா எட்டியிருப்பதாக பெருமை பொங்க கூறினார்.

Source - Polimer News

Similar News