நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் - மத்திய அரசு கணிப்பு
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணிப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசின் தேசியப் புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி துறையின் செயல்பாடு மந்தமாக இருப்பதே பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.157 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.