இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 450 பில்லியன் டாலரை நெருங்கியது - 3.51 பில்லியன் டாலர் ஒரே வாரத்தில் அதிகரிப்பு.!

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 450 பில்லியன் டாலரை நெருங்கியது - 3.51 பில்லியன் டாலர் ஒரே வாரத்தில் அதிகரிப்பு.!

Update: 2019-11-11 07:55 GMT

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் தங்கம் விலை ஏற்ற இறக்கம் போன்ற சிக்கலான சூழலையும் தாண்டி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 450 பில்லியன் டாலரை நெருங்கியுள்ளது.


முன்னதாக நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு $442.58 பில்லியன்  டாலர் என்ற அளவில் இருந்தது. தற்போது முடிவடைந்த வாரத்தில் $446.09 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


நவம்பர் முதல் வாரத்தில் மட்டும் $3.20 பில்லியன் டாலர் அதிகரிப்பை கண்டுள்ளது. விரைவில் 450 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் $301 மில்லியன் டாலராக இருந்த தங்க கையிருப்பு, $27.35 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


Similar News